சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க இளம்பெண்ணொருவர், தன் வாழ்வில் மறக்க முடியாத மோசமான ஒரு விடயத்தை சந்தித்தார்.
சுவிட்சர்லாந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார் அமெரிக்க இளம்பெண்ணொருவர்.
ஜெனீவாவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த அந்தப் பெண்ணை, ஒருவர் தாக்கி, தூக்கிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. சிறிது நேரத்துக்குப் பின், அந்த நபர் மட்டும் அங்கிருந்து வெளியேற, அதைத் தொடர்ந்து அரைகுறை ஆடையுடன் ஓடிவந்த அந்த இளம்பெண் உதவி கேட்டு சத்தமிடும் காட்சிகளும் அந்த கமெராவில் பதிவாகியுள்ளன.
அந்த 30 வயது ஆண், அந்த அமெரிக்க சுற்றுலாப்பயணியை வன்புணர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு சட்டத்தரணிகள் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

