ஒஸ்மானியா வித்தியாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

8 0

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு  உட்பட்ட பொத்துவில்   ஒஸ்மானியா  வித்தியாலய கட்டடத்தின் ஒரு பகுதி  செவ்வாய்க்கிழமை  (16) இரவு  இடிந்து விழுந்துள்ளது.

விடுமுறையின் பின் பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பிக்கப்பட்டது.  குறித்த பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். தரம் 5 வரை உள்ள இந்த  பாடசாலையில் 237 மாணவர்கள் கற்று வருகின்றனர்.

மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய தற்காலியமாக  குறித்த இன்று (17) பாடசாலை மூடப்பட்டுள்ளது.  என கோட்டக்கல்வி  பணிப்பாளர்  கே.ஹம்ஸா  தெரிவித்தார். இருந்த போதிலும்  பாடசாலையின்  ஆசிரியர்,  ஆசிரியைகள்  வருகை தந்திருந்தனர்.

இக் கட்டடத்தில் 10 வகுப்பறைகள் உள்ளன,  இவ் வகுப்பறை கட்டடம் சுமார் 73 ஆண்டு பழமையானதாகும் இது பொத்துவில் மத்திய கல்லூரியில் இருந்து ஒஸ்மானியா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு பிரிக்கப்பட்ட ஒரு தொகுதியாகும்.

இந்தக் கட்டடத்தில்  2015 ஆம் ஆண்டு  ஒஸ்மானியா  கனிஷ்ட வித்தியாலயம்  ஆரம்பிக்கப்பட்டு  இது வரை இந்த  பாடசாலை  கல்வி  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இப்பகுதி நிலம் சதுப்பு தன்மையுள்ளது என குறிப்பிடப்படுகிறது   இதன் காரணமாக  கூட கட்டிடம் இடிந்து  விழுந்திருக்கலாம்  என பொது மக்கள்  தெரிவிக்கின்றனர்.