நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக கொட்டகலையிலிருந்து அம்பேவெல இடையில் தொடருந்துகளை இயக்குவது மிகவும் கடினம் என தொடருந்து வீதி பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, தொடருந்து வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளதால் கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான தொடருந்து பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏனைய இடங்களில் பாலங்கள் மற்றும் வீதிகள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

