உக்ரைன் மீதான நான்கு ஆண்டு படையெடுப்புக்கு முடிவு: ஜேர்மனியில் கூறிய ஜெலென்ஸ்கி

17 0

உக்ரைன் அமைதி ஒப்பந்த முன்மொழிவுகள் சில நாட்களுக்குள் இறுதி செய்யப்படலாம் என்று பெர்லினில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடந்த பேச்சுவார்தைகளின்போது, அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்ட வரைவு அமைதித் திட்டம் ‘மிகவும் சாத்தியமானது’ என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்தார்.

அவர் இந்த திட்டங்கள் இறுதி செய்யப்பட்டால், அடுத்த வார இறுதியில் அமெரிக்காவில் மேலும் சாத்தியமான சந்திப்புகளுக்கு முன்பு அவை கிரெம்ளினுக்கு வழங்கப்படும் என்றார்.

இதனை உக்ரைன் மீதான கிட்டத்தட்ட நான்கு ஆண்டு படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய அமைதி ஒப்பந்த முன்மொழிவுகள் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

முன்னதாக, உக்ரைன் மற்றும் ஐரோப்பாவில் இருந்து சுமார் 90 சதவீதம் சமாதானத் திட்டத்தில் ஒருமித்த கருத்து இருப்பதாக அமெரிக்கா திங்களன்று கூறியது.peace deal could be finalised zelensky said in berlin

அப்போது “நாம் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஒரு சமாதானத் தீர்வுக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்தார்.

ஆனால், விளாடிமிர் புடினின் (Vladimir Putin) படையெடுப்புப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பிரதேசத்தின் தலைவிதி உட்பட முக்கிய பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று ஜெலென்ஸ்கி எச்சரித்தார்.

மேற்கத்திய நாடுகள் இந்த ஒப்பந்தத்தைச் சுற்றி ஒன்றுபட்டிருந்தாலும், இந்த முன்மொழிவுகளால் ரஷ்யா மகிழ்ச்சியடைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஏனெனில், இதுவரை பெர்லின் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதுவும் கூறவில்லை.

அத்துடன் ரஷ்யா ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை அல்ல, ஒரு விரிவான சமாதான ஒப்பந்தத்தையே விரும்புகிறது என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் செவ்வாயன்று மீண்டும் வலியுறுத்தினார்.

 

peace deal could be finalised zelensky said in berlin