தம்பலகாமம் பிரதேச சபையின் பாதீடு வெற்றி

9 0

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (16) 11 வாக்குகளால் நிறைவேறியது.

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை சேர்ந்த இருவரும் நடுநிலை வகித்தனர்.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவரே தவிசாளராக செயற்பட்டு வரும் நிலையில் தற்போதைய பாதீட்டின் படி ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தவிசாளர் உட்பட மூவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த இருவரும், இலங்கை தமிழரசு கட்சி 02,தமிழ் தேசிய மக்கள் முன்னணி 01, ஐக்கிய தேசிய கட்சி01,பொதுஜன பெரமுன,01, ஸ்ரீலங்கா சுதந்திர.கட்சி 01 என மொத்தமாக 11 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.