நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதியின் விபரீத செயல்

3 0

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக கந்தளாய் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட விளக்கமறியல் கைதியொருவர் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி  தன்னைதானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை( 16) கந்தளாய் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி தனது இரு கைகளிலும் மற்றும் நெஞ்சுப்பகுதியிலும் கீறிக்கொண்டு காயம் ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த நபரை உடனடியாக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், தொடர்ந்தும் அங்கு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

குறித்த கைதி 30 வயதுடைய ஆர்.டி. புஷ்ப குமார என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.