எதிர்வரும் 18ம் திகதி நாடாளுமன்ற அமர்வு

5 0

டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.