இலங்கையில் டிட்வா சூறாவளி பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், 6,200 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, 96,545 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வீடுகள் சூறாவளியின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ளன.
தற்போது, 22,348 குடும்பங்களைச் சேர்ந்த 70,297 பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 731 பாதுகாப்பான மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

