உளவு பார்ப்பதற்காக கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது ஜேர்மன் நிறுவனம் ஒன்று.
ஜேர்மனியிலுள்ள SWARM Biotactics என்னும் நிறுவனம், உளவு பார்ப்பதற்காக கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

கரப்பான் பூச்சிகளின் முதுகில், கமெரா, மைக் மற்றும் சிறிய ராடார் ஒன்று வைக்கப்பட்டுள்ள பை ஒன்றைப் பொருத்தி, அவற்றை உளவு பார்க்க பயன்படுத்துவதே இந்த திட்டம் என்கிறார், SWARM நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீஃபன் (Stefan Wilhelm).
குறிப்பாக, Madagascar hissing cockroach என்னும் கரப்பான் பூச்சியால் 15 கிராம் வரையிலான எடையுள்ள பொருட்களை சுமக்கமுடியும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவ்வகை கரப்பான் பூச்சிகளை உளவு பார்க்க தேர்ந்தெடுத்ததாகத் தெரிவிக்கிறார் அவர்.

பொதுவாகவே கரப்பான் பூச்சிகளால், ரசாயனங்கள், வெப்பம், கதிர்வீச்சு போன்ற அபாயகரமான சூழல்களை சமாளிக்க முடியும் என்கிறார் ஸ்டீஃபன்.
ஆக, SWARM நிறுவனம், ஜேர்மன் ராணுவத்துடன் இணைந்து இந்த கரப்பான் பூச்சிகளை பயன்படுத்துவது தொடர்பிலான சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.

