விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது

10 0

சுமார் எட்டு இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு விஸ்கி போத்தல் தொகையை சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ​வெளியேற முயன்ற இலங்கையர் ஒருவர் சனிக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மினுவங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சனிக்கிழமை (13) அதிகாலை எமிரேட்ஸ் விமானம் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதுடன் அவர் கொண்டு வந்த பயணப் பொதியை சோதனையிட்ட போது அதிலிருந்து 69 விஸ்கி போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த விஸ்கி பாட்டில்களுடன் செவ்வாய்க்கிழமை (15) அன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.