பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

12 0

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிறில் முனசிங்கவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த சாட்சிகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் மூலம் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது