வெளியான மின்னல் எச்சரிக்கை – இரவு 11:00 மணி வரை அமுலில்

7 0

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11:00 மணி வரை அமுலில் இருக்கும்.

இதனடிப்படையில், இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்னல் காரணமாக காயம் அல்லது சொத்து சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.