உக்குவளையில் இடைக்கிடையே மழை

8 0

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டாலும் இடைக்கிடயே மழை பெய்யும் நிலைமையையும் காணமுடிகிறது

இந்நிலையில் பெய்த மழை காரணமாக உக்குவளை பிரதேசத்திலுள்ள வீடுகளில் வர்த்தக நிலையங்களில் வடிகாண்களில்  மற்றும் வீட்டுத் தோட்டங்களில் இன்றும் மழை நீர்  நிரம்பி தேங்கியிருப்பதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.   நுளம்புகள் பரவுவதற்கான சாத்தியமும் காணமுடிகிறது

அவ்வாறிருக்க பிரதேசத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதுடன்  சிறிய மண்சரிவுகள்  ஏற்பட்டிருப்பதால் அவ்விடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உடத்தாவள எனும்  ரயில் நிறுத்துமிடத்துக்கு  சற்று அப்பால் மேட்டுப் பகுதி மண்சரிவுக்கான  அடையாளங்கள் இருப்பதால் அவ்விடத்தில் வசிப்போரும்   பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்குவளை பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர் ஊடாக அறிவித்துள்ளது

இந்நிலையில் பிரதேசத்தில் மழை நீர், காற்று மற்றும் சிறிய மண்சரிவுகள்  என்பவற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து மக்களில் அதிகமானோர் உக்குவளை பிரதேச செயலகத்தில் அரசாங்க நஷ்ட ஈடுகள் பெற்றுக்கொள்ள வருவதையும் காண முடிகிறது