“நான் தான் போரை நிறுத்தினேன்” – இந்தியா, பாக். மோதல் குறித்து மீண்டும் ட்ரம்ப் கருத்து!

19 0

இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே அவர் இவ்வாறாக 70 முறை கூறிவிட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவது போலவே மீண்டும் அதனைக் கூறியுள்ளார் ட்ரம்ப்.

பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: கடந்த 10 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கொசோவா – செர்பியா, பாகிஸ்தான் – இந்தியா, இஸ்ரேல் – ஈரான், எகிப்து – எதியோபியா, அர்மேனியா – அசர்பைஜான், கம்போடியா – தாய்லாந்து போர்களை நான் நிறுத்தியுள்ளேன்.

அண்மையில் மீண்டும் கம்போடியா – தாய்லாந்து இடையே புகைச்சல் ஏற்பட்டது. நான் அவர்களுக்கு போன் கால் செய்து போரை நிறுத்தச் சொல்லப்போகிறேன். இப்படித்தான் இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் இடையேயான போரையும் தொலைபேசியில் பேசி நிறுத்தினேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.