சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு முட்டையின் விலை ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொட்டலம் ரூ.470 முதல் 550 வரை விற்கப்படுவதாகவும் நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னதாக, சந்தையில் ஒரு முட்டை ரூ.25 முதல் 30 வரை விற்கப்பட்டது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்பட்ட முட்டை பற்றாக்குறையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

