மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்தது

23 0

பலபிட்டிய, பஹாக்மானாவத்தை, பி.ஆர். டி சில்வா மாவத்தையில் உள்ள ஒரு வீடு ஞாயிற்றுக்கிழமை (07) இரவு மின்னல் தாக்கி தீப்பிடித்ததாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மின்னல் தாக்குதலால் வீட்டில் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து மின் சாதனங்களும் எரிந்து சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கியபோது வீட்டில் யாரும் இல்லாததால், யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கியதால் வீட்டின்  அறையில் இருந்த வீட்டு உபகரணங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.