திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்

31 0

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் சனிக்கிழமை (29) கன்பெரா நகரில் திருமணம் நடைபெற்றது. இதன்மூலம், பதவியேற்ற பின்னர் திருமணம் செய்துகொண்ட முதல் அவுஸ்திரேலிய பிரதமர் எனும் பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது நல்ல நண்பர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் திருமதி ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

2019ல் தனது முதல் மனைவி கார்மலை அந்தோணி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.