நாகலகம் வீதியில் களனி ஆற்றின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு (30) 8.0 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் தகவலின் படி ஆற்றின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதற்கமைய இரவு 7:00 மணிக்கு 7.65 அடியாகவும், இரவு 8:00 மணிக்கு 7.80 அடியாகவும், இரவு 9:02 மணிக்கு 7.90 அடியாகவும், இரவு 10:00 மணிக்கு 8.00 அடியாகவும் அதிகரித்துள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் வீர நிலையை அடையவில்லை ஆகையால், களனி கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.அதன்படி, இன்று பிற்பகல் அப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

