நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இடர்நிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த கோர எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், சபாநாயகருக்கு இத்தீர்மானத்தை அறிவித்து, இரண்டு நாள் விவாதத்தை கோருவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக எம்.பி தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு நாளை திங்கட்கிழமை (01) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.
காலை 10.30 மணிமுதல் மாலை 06 மணிவரை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 06 மணிமுதல் இரவு 12 மணிவரை புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சுக்கான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

