170 மண்சரிவு சம்பவங்கள் பதிவு : 26 பேர் உயிரிழப்பு !

27 0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“நாட்டின் பல மாவட்டங்களில் இன்று காலை வரை மொத்தம் 170 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன” என்று கூறினார்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அபாய நிலை பகுதிகளில் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் கடுமையான மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முப்படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பிற அரச நிறுவனங்கள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றன.