2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை தாபிப்பதற்குமான சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சபையில் சமர்ப்பித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற அமர்வின்போது பிரதமர் இச்சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்தார்.
இச்சட்டமூலத்தின் நோக்கத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஸானி ரோஹணதீர வருமாறு வாசித்தார், இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தாபிப்புக்கென ஏற்பாடு செய்வதற்கும், பணக் கடன் வழங்கு தொழிலையும்,நுண்நிதித் தொழிலையும் ஒழுங்குப்படுத்துவதற்கும்,பணக் கடன் வழங்கு தொழிலினதும், நுண்நிதித் தொழிலினதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும், 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் பொருட்டு இச்சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது.

