இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான சீதை ஸ்ரீ நாச்சியார் இன்று புதன்கிழமை (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கடந்த 23 ஆம் திகதி திருப்பத்தூரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று காலை 11.05 மணிக்கு இந்தியாவின் திருச்சியிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-132 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.




