அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் கைதான நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

17 0

அநுராதபுரத்தில் பாடசாலையொன்றின் அதிபராக பதவி வகித்தபோது ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் ஆளும் கட்சியின் பேலியகொடை நகர சபை உறுப்பினரின் கணவரும் ஆரம்பப் பாடசாலை அதிபராக பதவி வகித்தவருமான இவர்  1 கிலோ 185 கிராம் ஹெரோயினுடன் கடந்த 5ஆம் திகதி அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டு, பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் அதிபர் பதவியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். விளக்கமறியலில் இருந்து வரும் அவருக்கு மீண்டும் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.