சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து ; சாரதி படுகாயம்!

23 0

ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில்  சுமார்  100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து திங்கட்கிழமை (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியெ விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.