இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம்

34 0

இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்கான முயற்சிகளில் பங்கேற்று தன் உயிரையே தியாகம் செய்த இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவரை கௌரவிக்கும் வகையில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது பிரான்ஸ் அரசு.

இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம்

இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம் | France Honour Indian Spy Noor Inayat Khan By Stamp

இரண்டாம் உலகப்போரின்போது போரில் பெண்களின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாகும்.

அவ்வகையில், ஒரு உளவாளியாக தன பங்கை ஆற்றிய இந்திய வம்சாவளிப்பெண், நூர் இனாயத் கான்.

இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம் | France Honour Indian Spy Noor Inayat Khan By Stamp

இந்திய தந்தைக்குப் பிறந்த நூர், பிரித்தானிய ராணுவத்தில் இணைந்து, நாஸி ஜேர்மனியால் பிடிக்கப்பட்ட பிரான்சுக்குள் மாறுவேடங்களில் நுழைந்து, உயிரைப் பணயம் வைத்து துணிச்சலுடன் அங்கிருந்து பிரித்தானியாவுக்கு ரேடியோ செய்திகள் அனுப்பும் ஆபத்தான பணியை மேற்கொண்டவர்.