புத்தளத்தில் பீடி இலைகள் கடத்தல்: சந்தேகநபர்கள் கைது!

15 0

புத்தளம் பகுதியில் சட்டவிரோதமாக வரியின்றி நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நச்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, திங்கட்கிழமை (24) காலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 699 கிலோகிராம் 700 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கெப் ரக வாகனமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 29 மற்றும் 37 வயதுடைய, கங்பிட்டி மற்றும் தலவில பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொரிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.