புன்னாலைக்கட்டுவன் கொலை – சந்தேகநபர் கைது

25 0

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது அருந்த சென்ற நபர் ஒருவர் இருவரால் தாக்குதல்களுக்கு உள்ளானார்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவர்மீது தாக்குதலை நடத்திய இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், அவர்களில் ஒருவரை இன்றைய தினம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.