மாவீரர் நாளினை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் கனடா வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மண்வாசணை அமைப்பினுடாக வல்வெட்டித்துறை,பருத்துறை,கரவெட்டி,நெல்லியடி,தொண்டமணாறு, ஆகிய பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 350க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் பருத்துறை சூரியமகால் மண்டபத்தில் 23/11/2025 இன்று மாலை3:00மணியளவில் இடம்பெற்ரது.
மாவீரர்களின் பெற்றோர் மண்டபத்திற்கு வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.
முதல் நிகழ்வாக பொதுச்சுடரேற்றல் பொதுபடத்திற்கான மலர் வணக்கத்தினை இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைசுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு.சிவாஜிலிங்கம்,மதத்தலைவர்கள்,சட்டத்தரணிகள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர். மாவிரர்களின் நினைவாக சிறப்புரையினை நாடளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்த்தினார்.















