இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இந்தியாவில், தமிழ்நாடு, திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை வீதியில் அமைந்துள்ள ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இத்திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது துணைவியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க கலந்துக்கொண்டனர்.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.












