எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். ஆனால் அவர் தந்தையாக பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கின்றார் என கூறி கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு எதிராக பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (21) அழைக்கப்பட்ட போது குறித்து பெண் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். ஆனால் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன நீதிமன்றில் ஆஜராகவில்லை.
குறித்த பெண் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உடல்நலக் குறைவு என கூறி கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இந்தக் குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன தான். ஆனால் அவர் தந்தையாக பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கின்றார். அதனால் தான் தந்தை-உறுதி சோதனை (Paternity Test) கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்போது குழந்தைக்கு இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்தக் குழந்தை இலங்கையில் வாழ வேண்டும். சாமிக கருணாரத்ன தான் தந்தை என்று எனக்குத் தெரியும்.
அவர் தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஒரே கோரிக்கை என்று அந்த பெண் தெரிவித்தார்.

