கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (21) பிற்பகல் 02.05 மணியளவில் மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று, கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
குறித்த ரயிலை தடம் ஏற்றுவதற்கு பணிக்குழாமினர் நடவடிக்கை எடுத்த போதிலும் மீண்டும் அந்த ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது குறித்த ரயில் தடம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

