யாழ். உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்பம்!

22 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் வெள்ளிக்கிழமை (21) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

மாவீரர் வார ஆரம்ப நிகழ்வான இன்றைய நினைவேந்தலில் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி, அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு இதன்போது அஞ்சலி செலுத்தினர்.