ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க முயற்சி: அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு சீமான் கண்டனம்

23 0

ஆலந்​தூரில் தொண்டு நிறு​வனம் நடத்தி வரும் ஆதர​வற்ற முதி​யோர் இல்​லத்தை இடிக்க முயல்​வ​தாக, அமைச்​சர் தா.மோ.அன்​பரசனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை ஆலந்​தூர் அய்​யப்​பந்​தாங்​கல் பரணிபுதூர் கல்​லூரி சாலை​யில் இயங்​கிவரும் ‘லிட்​டில் டிராப்​ஸ்’ ஆதர​வற்ற முதி​யோர் இல்​லத்தை இடித்​து​விடு​வேன் என அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் மிரட்​டல் விடுக்​கும் காணொளி பெரும் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

அன்னை தெர​சா​வால் தொடங்கி வைக்​கப்​பட்டு கடந்த 35 ஆண்​டு​களாக இயங்​கிவரும் இந்த ஆதர​வற்ற முதி​யோர் இல்​லத்​தில் 400-க்​கும் மேற்​பட்ட முதி​யோர் பயன்​பெற்று வரும் நிலை​யில், அதை இடித்​து​விடு​வேன் என ஓர் அமைச்​சரே மிரட்​டல் விடுத்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

முதி​யோர் இல்​லத்​தைச் சுற்றி அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களை கட்டி விற்​பனை செய்​துள்ள தனி​யார் கட்​டு​மான பெரு நிறு​வனம், முதி​யோர் இல்​லத்தை இடித்து அதன் வழி​யாகக் கழி​வுநீர் கால்​வாய் அமைக்க முயல்​வ​தாக​வும், அதற்கு அமைச்​சர் துணை நிற்​ப​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

தனி​யார் பெரு முதலா​ளி​களின் லாப நோக்​கத்​துக்​காக, முதி​யோர் இல்​லத்தை முடக்​கு​வது ஏற்​புடையதல்ல. திமுக அரசு தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​துக்கு ஆதர​வாகச் செயல்​படு​வதை கைவிட்​டு, ஆதர​வற்ற முதி​யோர் இல்​லத்தை இடிக்​கும் முயற்​சி​யைக் கைவிட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.