இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை இன்று (20) வெடித்துச் சிதறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செமேரு எரிமலை வெடித்ததில் கரும்புகையுடன் எரிமலை குழம்பும் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவா தீவின் மிக உயரமான மலையான செமேரு வெடித்ததில் 5.6 கி.மீ உயரத்துக்கு சாம்பல் பரவி மேகங்களுடன் கலந்தது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், செமேரு மலையின் வெடிப்பு அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அம்மலை தொடர்பில் உயர்ந்தளவிலான எச்சரிக்கையினை அந்நாட்டின் எரிமலையியல் நிறுவனம் விடுத்துள்ளது.
அத்தோடு, எரிமலை வெடிப்பு அபாயம் காரணமாக உள்ளூர் குடியிருப்பாளர்கள் 2.5 கி.மீ தொலைவில் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



