தென்கொரியாவில் படகு விபத்து ; இருவர் கைது

20 0

தென் கொரியாவின் தென்கிழக்கு கடற்கரையில் பாறைகளில் மோதி படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், படகு கேப்டன் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் 2014 ஆம் ஆண்டு 300 பேர் உயிரை காவுகொண்ட பெரிய படகு விபத்தின் நினைவுகளை மீட்டெழுப்பியுள்ளது.

சினான் கவுண்டியில் உள்ள ஜாங்சன் தீவின் கடற்கரையில்  புதன்கிழமை (19) அன்று ஆளில்லா ஜோக்டோ தீவுக்கு அருகே பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாக குயின் ஜெனுவியா 2 என்ற படகில்  இருந்த 267 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.  அதில் 27 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

படகோட்டி மற்றும் தலைமை அதிகாரியை கைது செய்ததாக தென் கொரிய கடலோர காவல்படை பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் விபத்துக்கு ஸ்டீயரிங் வீல் கோளாறு என தெரிவித்த படகோட்டி,  பின்னர் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததமையினால் பாதையை மாற்ற வேண்டிய புள்ளியை தவறவிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

படகு தற்போது அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்திற்கான சரியான காரணம் தொடர்பில்  மேலும் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.