காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் 31 மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை அவுஸ்திரேலியா கைவிட்டதை அடுத்து தற்போது அந்த மாநாடு துருக்கியில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்கான கோப் மாநாட்டை நடத்தும் உரிமை மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைக் கொண்ட ஒரு குழுவிற்கு உள்ளது.
தற்போது கோப் 30 உச்சிமாநாடு பிரேசிலில் நடைபெற்று வரும் நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் இறுதியாக ஒரு சமரசம் எட்டப்பட்டுள்ளது.
அன்படி, அடுத்த ஆண்டு ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டை துருக்கி நடத்தும் அதேவேளையில், அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலியா வழிநடத்தும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
பொதுவாக கோப் மாநாட்டின் தலைவராக அந்த மாநாடு நடைபெறும் நாட்டினரே நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த புதிய கூட்டணி எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

