முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு.

63 0

முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு
மல்லாவி,மாங்குளம், வீதிகள்,வர்த்தக நிலையங்கள் சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரித்து மாவீர்ர்களின் தியாகத்தை உணர்வு பூர்வமாக முன்னெடுத்தனர்.

மாவீரர் நாளினை முன்னிட்டு, முல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மல்லாவிப்பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர்கள் என 700க்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் விசேடமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் 19/11/2025 இன்று மதியம் 1:00மணியளவில் இடம்பெற்றது.

மாவீரர்களின் பெற்றோர் இசை வாத்தியங்களுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். முதல் நிகழ்வாக பொதுச்சுடரேற்றல் பொதுபடத்திற்கான மலர் வணக்கத்தினை தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைசுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.

அத்தோடு பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு உணவு பரிமாறி சிறப்பித்தனர். அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.