சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டிகளை ஓட்டும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் அண்மையில் செயற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான நியூசிலாந்து பெண்ணுக்கு முச்சக்கரவண்டியை ஓட்டுவதற்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாகும்.
சில முச்சக்கரவண்டி சாரதிகள் வாடகை அடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கரவண்டியை ஓட்டுவதற்கு கொடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.

