ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வட்டகொட நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் கிதுல்கல தலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரளையைச் சேர்ந்த 53 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியின் பின்புற இருக்கையில் இருந்த ஒரு பெண்ணும் காயமடைந்து தலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதிக வேகத்தில் சென்ற முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியும் வேனும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், வேன் சாரதி சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வேன் சாரதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

