ரயில் தடம்புரண்ட இடம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்

24 0

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரண்ட இடம் அபாயகரமான இடமாக அடையாளம் காணப்பட்டிருந்ததாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக ரயில் சேவைகளை நாளை (20) இரவுக்குள் முழுமையாக ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

நேற்று (18) பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு அஞ்சல் ரயில், இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில், மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததால் தடம் புரண்டது.

இதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் கொழும்பு கோட்டை முதல் நானுஓயா வரையிலும், பதுளை முதல் பண்டாரவளை வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்ட இந்த ரயிலின் இயந்திரம் மீது, இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய நிலையங்களுக்கு இடையேயுள்ள 33வது சுரங்கப்பாதை அருகே, நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்ததாக கூறப்படுகின்றது.