முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பங்களாதேஷிற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து அந்நாட்டின் “சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” வழங்கிய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.
நெருங்கிய அண்டை நாடாக, இந்தியா அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை உள்ளிட்ட வங்கதேச மக்களின் நலன்களுக்கு உறுதிபூண்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காக, இந்தியா எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், டாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது “ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை – ஓகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது.
இதற்கமைய நேற்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஹசீனாவை உடனடியாக எமது நாட்டிற்கு அனுப்புங்கள் எனவும் பங்களாதேஷ் கோரியுள்ளது.

