தமிழ் ஊடகங்கள் மற்றும் வலையொளியினருக்கும் (Youtube) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்!
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சில் நவம்பர் 27 ஆம் நாள் வியாழக்கிழமை LES PYRAMIDS 16 Av. DE SAINT-GERMAIN, 78560 LE PORT-MARLY என்னும் இடத்தில் நண்பகல் 12.00 மணிக்குத் தொடங்கவுள்ளது .
இந் நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊடகத்தினர், படப்பிடிப்பாளர்கள் எதிர்வரும் 23.11.2025 ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பாக உங்கள் ஊடகத்தின் விவரம், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஊடகம் தொடர்பாகக் கலந்து கொள்பவரின் பெயர், விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.
எம்மிடம் முன்னறிவித்தலோ, ஒப்புதலோ பெறாதவர்கள் படப்பிடிப்பு உள்ளிட்ட ஊடக செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு – ஊடகப்பிரிவு
தொடர்புகளுக்கு – 06 29 16 25 41
மேலதிக தொடர்புகளுக்கு:
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு – 01 48 22 01 75


