பிரித்தானியா அறிவிக்கவுள்ள புதிய புகலிட கொள்கை., குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

68 0

பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான புதிய புகலிட கொள்கையை (Asylum Policy) அறிவிக்கவுள்ளது.

இந்த மாற்றம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது.

புதிய திட்டத்தின்படி, புகலிட கோரிக்கையாளர்களுக்கு இனி நிரந்தர குடியுரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இதுவரை, புகலிடம் கோருவோர் 5 ஆண்டுகள் பாதுகாப்பு பெற்றப்பின் Indefinite Leave to Remain (ILR) விண்ணப்பிக்க முடிந்தது.

ஆனால் புதிய விதிமுறையில், 2.5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அதன்பின் மீண்டும் மீண்டும் மதிப்பீடு செய்யப்படும்.

 

உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், “இது சட்டவிரோத குடியேற்றத்திற்கு எச்சரிக்கை. படகுகளில் வந்து நாட்டிற்குள் நுழையவேண்டாம். சட்டவிரோத குடியேற்றம் எங்கள் நாட்டை பிளவுபடுத்துகிறது” என கூறியுள்ளார்.

இந்த புதிய முறை டென்மார்க் பின்பற்றும் கடுமையான கொள்கையை ஒத்திருக்கிறது. அங்கு புலம்பெயர்ந்தோர் தற்காலிக அனுமதி பெற்று, ஒவ்வொரு முறையும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இந்த திட்டம்அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Refugee Council தலைவர் என்வர் சாலமன், “இது தேவையற்ற கடுமையான நடவடிக்கை. துன்புறுத்தல், போர், வன்முறை, காரணமாக மக்கள் பாதுகாப்பு தேடுவதை இது தடுக்காது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

லிபரல் டெமோக்ராட் காட்சியைச் சேர்ந்த Max Wilkinson, “கடுமையான விதிகள் மட்டும் தீர்வு அல்ல. விரைவான விண்ணப்ப செயல்முறை மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் அவசியம்” எனக் கூறியுள்ளார்.

இந்த மாற்றம், பிரித்தானியாவின் புகலிட கொள்கையில் மிகப்பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.