வரவு-செலவு திட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாமையால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்தோம்

43 0

அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு  2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்த போதும், எமது எதிர்பார்ப்புகள் தற்போது பொய்யாகியுள்ளன. ஆகையால் அரசாங்கத்தின்  இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்  வைத்தியர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.

வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,

வைத்தியர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொழில் முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.   வைத்தியர்களை இந்நாட்டில் உள்ள விசேட ஊழியர் குழுவினராக அடையாளம் கண்டு  அவர்களுக்கான  சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவது அவசியம். ஆகையால்  வைத்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள டெட் கொடுப்பனவு, மேலதிக சேவைகால கொடுப்பனவு மற்றும் விடுமுறை கால கொடுப்பனவு தொடர்பிலும் அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியம்.

அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு  2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்த போதும், எமது எதிர்பார்ப்புகள் தற்போது பொய்யாகியுள்ளன. ஆகையால் அரசாங்கத்தின்  இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட திங்கட்கிழமை (17) காலை 9.30 மணியளவில்  ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்த கலந்துரையாடல் இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல் போல அமையக் கூடாது என்பதில் நாம் தீர்மானமாக உள்ளோம்.  தீர்க்கமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் வாக்குறுதிகளை இனி ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.

அரசாங்கத்தினர் எமக்கான தீர்வுகளை பெற்றுத் தருவார்கள்  என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இல்லை எனில் வைத்தியர்களால் திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளதுடன், அதை தீவிரப்படுத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.