போதைப்பொருள் ஸ்டிக்கர் சம்பவத்திலும் NPPக்கு தொடர்பு!

22 0

பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது போதைப்பொருள் பொட்டலங்களைக் கண்டறிய குறியீடுகளை உருவாக்கும் இடம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த இன்று (16) பல விடயங்களை வெளிப்படுத்தினார்.

பொலிஸ் மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்தினால், கடந்த வெள்ளிக்கிழமை (14) இந்தக் குறியீடுகள் உருவாக்கப்பட்ட கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பிரேமநாத் சி. தொலவத்த, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளர் என்று குறிப்பிட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னரும் போலி ஆவணங்களைத் தயாரித்து குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர் என்று பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.