இந்தியாவின் நவ்காமில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இறந்த ஒன்பது பேரில் 57 வயது தையல்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இருந்து அண்மையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளை பொலிஸாரும் தடயவியல் குழுவும் பிரித்தெடுக்கும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
வெடிபொருட்களின் பொட்டலங்களுக்கான பைகளை தைப்பதற்காக பொலிஸார் முகமது ஷாஃபி பரே என்ற நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு சென்ற குறித்த தையல்காரர், வீட்டுக்கு உணவுக்காக சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போதே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது தந்தை வீட்டுக்கு வந்த போது அதிக குளிர் காரணமாக, அவரை ‘போக வேண்டாம் அப்பா’ என கூறியதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சில மணிநேரங்களில் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த அவர்கள் நீண்ட நேரத்திற்கு பின்னரே உயிரிழந்தவரின் உடலை கண்டுபிடித்ததாக கூறியுள்ளனர்.

