யாழ். நெடுந்தீவில் பாவனையற்ற காணியிலிருந்து துப்பாக்கி மீட்பு

28 0

யாழ். நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கடந்த 14ஆம் திகதி இரவு குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த துப்பாக்கியை நீதிமன்றில்  ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.