வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 25 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மரக்குற்றிகள் நேற்றையதினம் (13.11.2025) மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்த குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

