பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும்

27 0

பாராளுமன்ற அமர்வின் போது  பாராளுமன்ற கௌரவத்துக்கு பொருத்தமற்ற மற்றும் தகாத வார்த்தைகளை ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதையும், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை கடுமையாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம்  வெள்ளிக்கிழமை (14)  கூடிய போது சபைக்கு அறிவிப்பு விடுக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சபாநாயகர் மேலும் அறிவித்ததாவது,

பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற கௌரவத்துக்கு பொருத்தமற்ற மற்றும் தகாத வார்த்தைகளை ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் உயரிய கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அது வெறுக்கத்தக்கதுடன், கவலைக்குரியது என்றும்  சபைக்கு அறிவித்துக் கொள்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிறிதொரு உறுப்பினரை இலக்காகக் கொண்டு  பயன்படுத்தும் இவ்வாறான தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதையும்,  குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை கடுமையாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் மேன்மைபொருந்திய பாராளுமன்றத்தின் உயரிய கௌரவத்தை பாதுகாப்பதற்கு சகல மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.