பண்டுவஸ்நுவர பி.ச வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் NPP தோல்வி

32 0

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.

பிரதேச சபை தவிசாளர் சஞ்சீவ கருணாசாகர சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, பண்டுவஸ்நுவர வரவு செலவுத் திட்டம் 4 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் அகலவத்த பிரதேச சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியால் நியமிக்கப்பட்ட தலைவர் லலித் குமாரரத்ன, வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் கிடைத்தன, மேலும் மூன்று வாக்குகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

இதன்போது, ​​சபையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சமிந்த ரணவக்கவின் வாக்கு சபை செயலாளரால் தவறாகப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர் சபையின் செயலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஒன்பது வாக்குகளும் எதிராக எட்டு வாக்குகளும் இருப்பதாகக் கூறினார்.

மூன்று பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த அறிக்கையை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பை வௌியிட்டிருந்தனர்.

இதனால் சபை அமர்வு 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.